உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  80 கிலோ இரும்பு சட்டம் விழுந்து பெயின்டர் பலி

 80 கிலோ இரும்பு சட்டம் விழுந்து பெயின்டர் பலி

வடபழனி: தனியார் மருத்துவமனையில், 80 கிலோ இரும்பு சட்டம் விழுந்து, பெயின்டர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்ராம், 41. சென்னை, குரோம்பேட்டையில் தங்கி, தனியார் பேப்ரிகேஷன் நிறுவனத்தில், பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 17ம் தேதி, வடபழனியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில், 'வெர்டிக்கல் தோட்டம்' அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அங்கு, செங்குத்தாக நிறுத்தப்பட்டிருந்த 80 கிலோ இரும்பு சட்டத்திற்கு, சாய்ராம் பெயின்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக இரும்பு சட்டம் சரிந்து விழுந்ததில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, அதே மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். வடபழனி போலீசார் உடலை மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை