உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாடியில் இருந்து விழுந்த பெயின்டர் உயிரிழப்பு

 மாடியில் இருந்து விழுந்த பெயின்டர் உயிரிழப்பு

கோடம்பாக்கம்: பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேஷ், 45; பெயின்டர். இவர், கடந்த டிச., 31ம் தேதி, சூளைமேடு வன்னியர் தெருவில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில், பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டார். ஏணியில் ஏறி, முதல் மாடியில் வர்ணம் பூசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், சுரேஷின் இடுப்பு, முதுகு மற்றும் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, சூளைமேட்டில் உள்ள அம்மா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து, கோடம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை