உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பலி

பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பலி

கொடுங்கையூர்: பணியின்போது தவறி விழுந்து பெயின்டர் பரிதாபமாக உயிரிழந்தார். கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 153வது தெருவைச் சேர்ந்தவர் சேகர், 51; பெயின்டர். கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, எத்திராஜ்சாமி சாலையில் உள்ள ஓம் சக்தி டீலர்ஸ் நிறுவனத்தில், நேற்று மாலை பெயின்ட் அடிக்கும் பணியை மேற்கொண்டார். அப்போது, சேகர் கூரை ஓடு மீது கால் வைத்துள்ளார். இதில் ஓடு உடைந்து கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் இறந்தது தெரிய வந்தது. கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை