உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பி.ஏ.கே.பி., மாணவன் கேரம் போட்டியில் முதலிடம்

பி.ஏ.கே.பி., மாணவன் கேரம் போட்டியில் முதலிடம்

சென்னை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அணையம் சார்பில், 2025ம் ஆண்டிற்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், நேரு விளையாட்டு அரங்கில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் கேரம் போட்டியில், 300க்கும் மேலான மாணவ - மாணவியர் பங்கேற்றனர். போட்டிகள் ஐந்து சுற்றுகளாக நடத்தப்பட்டு பின், நாக் அவுட் முறைக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்தப் போட்டி முடிவில், ஆடவர் பிரிவில், வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பி., பள்ளி மாணவன் அப்துல்லாவும், நேற்று நடந்த மகளிர் பிரிவு போட்டியில், ராயபுரம் சி.எஸ்.ஐ., நார்த் விக் பள்ளி மாணவி ஹரணி முதல் இடம் பிடித்து, மண்டல போட்டிக்கு தகுதி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ