உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பனகல் பூங்கா - கோடம்பாக்கம் சுரங்கப்பணி நிறைவு

பனகல் பூங்கா - கோடம்பாக்கம் சுரங்கப்பணி நிறைவு

சென்னை: பனகல் பூங்கா முதல் கோடம்பாக்கம் இடையே, மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்டும் பணியை முடிந்து, ராட்சத இயந்திரம் நேற்று, வெற்றிகரமாக வெளியேறியது. 'பெலிகன்' என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் 594 நாட்களில், மொத்தம் 2,076 மீட்டர் துாரம் பணியை முடித்து, வெற்றிகரமாக நேற்று வெளியேற்றப்பட்டது. இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'கோடம்பாக்கத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அடியில், 31.40 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. 'இது, இந்த வழித்தடத்திலேயே மிக ஆழமான பகுதிகளில் ஒன்று. இதில், சிக்கலான சவால்கள் இருந்தபோதிலும், திட்டக் குழுவினர் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வெற்றிகரமாகவும் முடித்து சாதனை செய்துள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ