உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாஜி தலைவரின் மகனை தாக்கிய ஊராட்சி தலைவி மகனுக்கு வலை

மாஜி தலைவரின் மகனை தாக்கிய ஊராட்சி தலைவி மகனுக்கு வலை

பம்மல்,பம்மலை அடுத்த பொழிச்சலுார் ஊராட்சி முன்னாள் தலைவரான ஞானமணி மகன் சரவணன், 35. மாற்றுத்திறனாளி. நேற்று முன்தினம், அதே பகுதியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலுக்கு சென்றார்.அப்போது, ஏற்கனவே கோவிலின் உள்ளே இருந்த, பொழிச்சலுார் ஊராட்சி தலைவி வனஜாவின் மகன் தினேஷ் பாபு, 35, என்பவருக்கும், சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, தினேஷ் பாபு தன் நண்பருடன் சேர்ந்து, சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளார். பதிலுக்கு, சரவணனும் தாக்கியுள்ளார்.இதில், இருவருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த பக்தர்கள் சிதறி ஓடினர். தகவல் அறிந்து, சங்கர் நகர் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.விசாரணைக்கு பின், போலீசார் கூறியதாவது:அகத்தீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் நன்கொடை பணம், எண்ணெய், நெய் மற்றும் சிதறு தேங்காய் ஆகியவற்றை உரிமை கொண்டாடுவது தொடர்பாக, அப்பகுதியை சேர்ந்த மூன்று குழுக்களுக்கு இடையே போட்டி இருந்து வந்துள்ளது.அது தொடர்பாக ஏற்பட்ட மோதலே, கோவிலுக்குள் அடிதடியில் முடிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்துள்ளனர். அதன்படி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை