உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாரிவாக்கம் - -கண்ணப்பாளையம் சாலை அமைக்கும் பணிகள் மந்தம்

பாரிவாக்கம் - -கண்ணப்பாளையம் சாலை அமைக்கும் பணிகள் மந்தம்

பூந்தமல்லி, கிடப்பில் போடப்பட்ட, பாரிவாக்கம் - -கண்ணப்பாளையம் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் -- கண்ணப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளித்தது.இந்த சாலையில் சிறு, குறு தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்புகள் உள்ளன.ஆவடியில் இருந்து ஆயில் சேரி, கண்ணப்பாளையம், பாரிவாக்கம் வழியாக பூந்தமல்லி செல்லும் அரசு சிற்றுந்துகள், இவ்வழியாகச் சென்று வருகின்றன.கடந்த இரு வாரங்களுக்கு முன், பாரிவாக்கம் -- கண்ணப்பாளையம் செல்லும் சாலையில், புதிய சாலை அமைக்க கருங்கல் ஜல்லி கொட்டப்பட்டது.இந்நிலையில், ஜல்லி கொட்டி பல நாட்கள் ஆகியும் சாலை அமைக்காததால், வாகன ஓட்டிகள் கருங்கல் ஜல்லியில் இடறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர்.குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.அதுமட்டுமின்றி, சாலையில் மின்விளக்குகள் சரியாக எரியாததால், இரவு நேரங்களில் சாலை கும்மிருட்டாகக் காட்சி அளிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் இவ்வழியாகச் செல்லும் பெண்களிடம், அடிக்கடி வழிப்பறி நடப்பதாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், ஜல்லி கொட்டப்பட்டுள்ள பகுதியில் விரைந்து சாலை அமைக்கவும், சாலையில் போதுமான மின்விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை