உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குரூப் -- 1 தேர்வில் மனிதநேயம் மாணவர்கள் 17 பேர் வெற்றி

குரூப் -- 1 தேர்வில் மனிதநேயம் மாணவர்கள் 17 பேர் வெற்றி

சென்னை, சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில், மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில் பயிற்சி பெற்று, ஆண்டுதோறும் அரசு தேர்வுகளில், பல மாணவ - மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.அந்த வரிசையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 2024 ஜூலை 13ம் தேதி நடத்திய குரூப் - 1 முதல்நிலை தேர்வின் முடிவுகள் செப்., 2ம் தேதி வெளியானது.முதன்மை தேர்வு, 2024 டிச., 10 - 13ம் தேதி நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாயின. இதில், மனிதநேயம் அறக்கட்டளை மாணவ - மாணவியர் 17 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.முதன்மை தேர்வில் வெற்றி பெற்ற மனித நேயம் மாணவர்கள் மற்றும் பிற மாணவர்களும், நேர்முக தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. விருப்பமுடையோர் 044 - 2435 8373, 2433 0095, 98404 39393 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.mntfreeias.comஎன்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.மாதிரி நேர்முக தேர்விற்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ