இடமாறிய வில்லிவாக்கம் பஸ் நிலையம் போக்குவரத்து வசதியின்றி பயணியர் தவிப்பு
வில்லிவாக்கம்,மெட்ரோ ரயில் பணிக்காக, ஐ.சி.எப்.,வுக்கு இடமாறிய வில்லிவாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல, போதிய போக்குவரத்து வசதியில்லாதல், மக்கள் பல்வித இன்னல்களை சந்திக்கின்றனர்.மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளில் ஒரு பகுதி வில்லிவாக்கம் பஸ் நிலையம் அருகில் நடக்கிறது. இதனால், இந்த பஸ் நிலையம், தற்காலிகமாக, ஐ.சி.எப்., நிலையத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த பிப்., முதல் வில்லிவாக்கத்தில் இருந்து, ஏழு வழித்தடகளில் இயக்கிய 63 மாநகர பஸ்கள், ஐ.சி.எப்., பஸ் நிலையத்தில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடமாற்றத்தால், ஆயிரக்கணக்கான பயணியர் காலையும் மாலையும் கடும் அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, வில்லிவாக்கம் பயணியர்கள் கூறியதாவது :பல ஆண்டுகளாக இயங்கிய, வில்லிவாக்கம் பேருந்து நிலையம், தற்காலிகமாக ஐ.சி.எப்.,வுக்கு மாற்றப்பட்டது. இதனால், வில்லிவாக்கம் சுற்றுவட்டார பயணியர் பல்வேறு வழிகளில் சிரமப்படுகின்றனர். வில்லிவாக்கத்தில் இருந்து, எம்.டி.எச்., சாலைக்கு செல்லவும், ரயில் நிலையத்திற்கு பேருந்து நிலையத்திற்கு செல்ல குறைந்தபட்சம், 50 - 100 வரை செலவாகிறது. மினி பஸ் சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே செல்கின்றன. ரயில்நிலையம் - ஐ.சி.எப்., பழைய பேருந்து நிலையம் - ஐ.சி.எப்., வழிதடத்தில் மினி பஸ் இயக்க வேண்டும். வில்லிவாக்கத்தில், மெட்ரோ பணியால் மாற்று வழி செய்த சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. மெட்ரோ பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.***************