பஸ் நிறுத்ததில் மழைநீர் தேக்கம் பூந்தமல்லியில் பயணியர் அவதி
பூந்தமல்லி, பூந்தமல்லி டிரங் சாலையில் கரையான்சாவடி உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி ஆவடி, அம்பத்துார், போரூர், கிண்டி, சைதாப்பேட்டை, வடபழனி, குன்றத்துார், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.இந்த சாலையில் மழை நீர் வடிகால்வாய் இல்லை. இதனால், சில நிமிடங்கள் மழை பெய்தாலே சாலையில் குட்டை போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால், அங்கு பேருந்திற்கு காத்திருக்கும் பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். மழைநீர் வடிவதற்கு நீண்ட நாட்களாவதால் சுகாதரா சீர்கேடும் ஏற்படுகிறது. பூந்தமல்லி நகராட்சி நிர்வாகத்தினர் மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.