சோழிங்கநல்லுாரில் 161 பேருக்கு பட்டா
சோழிங்கநல்லுார்,சோழிங்கநல்லுார் தாலுகா, துரைப்பாக்கம், ஜல்லடையான்பேட்டை, கொட்டிவாக்கம் பகுதியில், அரசு இடத்தில் பல ஆண்டுகளாக மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவ்வாறு வசித்து வந்த 161 குடும்பத்தினருக்கு, வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று, சோழிங்கநல்லுாரில் நடந்தது. மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், அனைத்து பயனாளிகளுக்கும் பட்டா வழங்கினார். இதில், தென் சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.