கடைகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு எம்.எம்.டி.ஏ., காலனியில் அவலம்
அரும்பாக்கம், அண்ணா நகர் மண்டலம், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில், விநாயகபுரம் பிரதான சாலை உள்ளது.எம்.எம்.டி.ஏ., காலனி - 100 அடி சாலையை இணைக்கும் இந்த சாலையின் இருபுற நடைபாதைகளிலும் மெக்கானிக் கடைகள், உணவகம், டீ கடைகள் என, பலவிதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அதேபோல், வாட்டர் டேங்க் - எம்.எம்.டி.ஏ., காலனி பிரதான சாலையில், சந்தை என்ற பெயரில் நடைபாதை முழுதும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.இதனால் பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து சென்று விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:எம்.எம்.டி.ஏ., காலனியில் பல ஆண்டுகளாக நடைபாதை ஆக்கிரமிப்பு உள்ளது. மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டும் பயனில்லை.தடுக்க வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர். எனவே, இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.