உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையை கடக்க 5 வினாடி பாதசாரிகள் திக்... திக்!

சாலையை கடக்க 5 வினாடி பாதசாரிகள் திக்... திக்!

சென்னை,சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில், சாலையை கடக்க 5 நொடிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதால், பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக, முதியோர் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுவது மட்டுமின்றி, அவ்வழியே செல்லும் வாகனங்களில் அடிபட்டு, காயமடையும் சம்பவமும் நடந்து வருகிறது. இதுகுறித்து பாதசாரிகள் கூறியதாவது:சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள சிக்னலில், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கென, 12 வினாடிகள் ஒதுக்கப்பட்டதாக, சிக்னல் திரையில் காட்டப்படுகிறது.ஆனால், 5 வினாடிகளிலேயே பச்சை நிற விளக்கு எரிவதால், வாகனங்கள் சீறி பாய்கின்றன. வாலிபர்களால்கூட 5 வினாடிகளில் அந்த சாலையை கடக்க முடியாதபோது, முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகளால் எப்படி கடக்க முடியும். இதனால், அப்பகுதியை கடப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.உயிரிழப்பு ஏற்படும் முன், சாலையை கடப்பதற்கு தேவையான வினாடிகளை சிக்னலில் ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ