உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடப்பதற்கு தகுதியற்ற நடைபாதை கீழ்ப்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி

நடப்பதற்கு தகுதியற்ற நடைபாதை கீழ்ப்பாக்கத்தில் பாதசாரிகள் அவதி

கீழ்ப்பாக்கம்,:பூந்தமல்லி நெடுஞ்சாலையில், நடப்பதற்கே தகுதியில்லாத நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளது. இங்கு, கீழ்ப்பாக்கத்தில் இருந்து பிராட்வேயும், பிராட்வேயில் இருந்து கீழ்ப்பாக்கம், அண்ணா நகரை நோக்கிச் செல்லும் இரு பாதைகள் உள்ளன.இவ்வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில், நடப்பதற்கே தகுதியில்லாத வகையில், நடைபாதைகள் சேதமடைந்து கிடக்கின்றன.குறிப்பாக, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தின் எதிர்புறத்தில் உள்ள நடைபாதையில், கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இதனால், பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர். அதே சாலையில் சில இடங்களில், ஆக்கிரமிப்பு கடைகள் நிரந்தரமாக நடைபாதையிலேயே அமைந்துள்ளன. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை கண்காணித்து, உடைந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை