உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேறு இடத்தில் பொருட்களை இறக்கினால் அபராதம்: வியாபாரிகள் எதிர்ப்பு

வேறு இடத்தில் பொருட்களை இறக்கினால் அபராதம்: வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னை:தமிழகத்திற்கு பருப்பு வகைகள், சீரகம், கடுகு, எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவை, வட மாநிலங்களில் இருந்தும், அரிசி கர்நாடகாவில் இருந்தும் தினமும் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ், பொருட்கள் எந்த இடத்தில் ஏற்றப்படுகிறதோ, அந்த இடத்தின் முகவரியும், அதை வாங்குபவரின் ரசீதில், பொருட்கள் இறக்கப்படும் இடத்தின் முகவரியும் குறிப்பிடப்பட வேண்டும். ரசீதில் குறிப்பிடப்படாத வேறு இடங்களில் இறக்கினால், கணக்கில் காட்டப்படாத பொருட்களாக கருதி, அபராதம் விதிக்கப்படுகிறது. இதுகுறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது: ஒரே சமயத்தில் மொத்தமாக பொருட்கள் வரும் சூழலில், அவற்றை இறக்கிவைக்க, குடோன்களில் இட வசதி இல்லை என்றால், வேறு இடத்தில் இறக்கி வைக்கப்படும். அப்போது, ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் ரசீதில் தெரிவித்த முகவரி இல்லை என்ற காரணத்திற்காக, ஏற்கனவே ஜி.எஸ்.டி., செலுத்தியது போக, இறக்கப்படும் பொருட்களின் மதிப்பில், 5 சதவீதம் மற்றும் அதற்கு ஒன்றரை மடங்கு அபராதம் என, சேர்த்து வசூலிக்கின்றனர். இது, வணிகர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, வணிக வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்த இடம் போதாத நிலையில், புதிய இடத்தில் இறக்க அனுமதி அளிக்க வேண்டும். அதற்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பம் செய்து, அதற்குரிய தொகையையும் செலுத்த, ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை