உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரவில் தொடரும் மின்தடை மக்கள் துாக்கமின்றி தவிப்பு

இரவில் தொடரும் மின்தடை மக்கள் துாக்கமின்றி தவிப்பு

முகலிவாக்கம்,இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், முகலிவாக்கம், ஓ.எம்.ஆர்., பகுதிவாசிகள் துாக்கமின்றி தவிக்கின்றனர்.ஆலந்துாரை அடுத்த முகலிவாக்கத்தில், 20க்கும் மேற்பட்ட நகர்கள் உள்ளன. மின் மாற்றிகள் பழுதடைந்து உள்ளதால், அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.சில நாட்களாக, எஸ்.எஸ்.கோவில் தெரு, ஆறுமுகம் நகர், வி.ஜி.எம்., கார்டன், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில், இரவு நேரத்தில் பல மணி நேரம் மின் தடை ஏற்படுகிறது.துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், காரப்பாக்கம், சோழிங்கநல்லுார் பகுதியில், நள்ளிரவில் மின் தடை ஏற்படுகிறது. இதனால், மின் சாதன பொருட்கள் சேதமடைவதுடன், துாக்கமின்றி அப்பகுதிவாசிகள் தவிக்கின்றனர்.எனவே, சீரான மின் வினியோகம் வழங்க, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ