மேலும் செய்திகள்
அடிக்கடி மின் தடை: மணலிபுதுநகர் மக்கள் அவதி
20-Oct-2025
மணலிபுதுநகர்: போக்குவரத்திற்கு லாயக்கற்று சகதியாக மாறிய மணலிபுதுநகர் சாலைகளை சீரமைக்கக் கோரி, அப்பகுதிமக்கள் நாற்காலி போட்டு அமர்ந்து, நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மணலிபுதுநகர், 270 வது பிளாக், 90, 91, 92வது தெருக்களில், பாதாள சாக்கடை மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக, பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணி முடிந்தபின், முறையாக சீரமைக்கப்படவில்லை. இதனால், பரவலாக பெய்து வரும் மழையால், அந்த தெருக்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பாதசாரிகளும் சேற்றில் வழுக்கி விழும் அவலநிலை நீடிக்கிறது. 'இறந்தவரின் உடலை கூட வீட்டிற்கு கொண்டு வர முடியாமல், மருத்துவமனையில் இருந்து நேரடியாக, சுடுகாட்டிற்கு செல்லவேண்டிய அவலம் நீடிக்கிறது' என பகுதிமக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில், சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரி, நேற்று காலை 90வது தெருவில், சகதியான சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்து, நுாதன போராட்டத்தில் பகுதி மக்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.
20-Oct-2025