விஜய் பிரசாரம் அனுமதி கோரி மனு
சென்னை:சென்னையில் த.வெ.க., தலைவர் விஜய், இரண்டு நாட்கள் மக்கள் சந்திப்பு பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளதால், அனுமதி வழங்கக்கோரி, கமிஷனர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டுள்ளது. த.வெ.க.,வின் தி.நகர் மாவட்ட செயலர் வேல்முருகன் அளித்துள்ள மனு : த.வெ.க., தலைவர் விஜய் வரும் 27ம் தேதி வடசென்னையிலும், அக்., 25ம் தேதி தென்சென்னையிலும் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். முல்லைநகர், அகரம், ராயபுரம், புளியந்தோப்பு, கொருக்குப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், ஆயிரம் விளக்கு, தி.நகர், எம்.ஜி.ஆர்.நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், கண்ணகி நகர், ஆலந்துார், வேளச்சேரி, வில்லிவாக்கம், அயனாவரம், அம்பத்துார், மதுரவாயல் உள்ளிட்ட இடங்களில் உரையாற்ற உள்ளார். இதற்கு பாதுகாப்பு வழங்கி, அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.