உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போன் திருடியவர் சிக்கினார்

போன் திருடியவர் சிக்கினார்

சென்னை, திருவொற்றியூர், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் பூபாலன், 27; கார் ஓட்டுனர். கடந்த, 7ம் தேதி மதியம் திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் காரை நிறுத்தி உறங்கி உள்ளார்.பின், எழுந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த அவரது மொபைல் போன் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரித்தனர்.இதில், விருதுநகர் மாவட்டம் வீரமணிகண்டன், 30, திருவேற்காடைச் சேர்ந்த காளிதாஸ், 40, ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், அவர்களது கூட்டாளியான மெரினா, காமராஜர் சாலையைச் சேர்ந்த சதீஷ், 21, என்பவரை நேற்று கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே, ஒரு கொலை முயற்சி உட்பட, ஐந்து வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை