உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி முருகன் கோவில் பார்க்கிங்கில் குப்பை குவியல்

வடபழனி முருகன் கோவில் பார்க்கிங்கில் குப்பை குவியல்

வடபழனி, வடபழனி முருகன் கோவில் வாகன நிறுத்தத்தில், மாநகராட்சி சார்பில் குப்பை குவிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று வடபழனி முருகன் கோவில். தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில், பக்தர்களின் கூட்டம் இன்னும் பன்மடங்கு அதிகரித்து காணப்படும். கோவில் வரும் பக்தர்கள், தங்கள் கார்களை நிறுத்த, வள்ளி திருமணம் மண்டபம் எதிரே உள்ள கோவில் நிலத்தில் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, இந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் அப்பகுதியில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டுள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அப்பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அகற்றுவதுடன், தொடர்ந்து குப்பை கொட்டாமல் இருக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை