பி.கே.எம்., மெட்ரிக் பள்ளி: எறிபந்து போட்டியில் முதலிடம்
திருப்போரூர்:தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், மானாமதி அரசு மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பில், திருப்போரூர் குறுவட்ட அளவிலான எறிபந்து போட்டி, பையனுார் விநாயகா மிஷன் கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடந்தன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் பங்கேற்றனர். பெண்களில் 14 வயது பிரிவில், கேளம்பாக்கம் பி.கே.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவியர்; 17 வயது பிரிவில், திருப்போரூர் ஆறுபடை வீடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர்; 19 வயது பிரிவில், கேளம்பாக்கம் பி.கே.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர் முதலிடம் பிடித்தனர்.