மேலும் செய்திகள்
சிறுமியிடம் அத்துமீறல் முதியவர் கைது
24-Apr-2025
ஆவடி ஆவடி காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த சூர்யா, 19, என்கிற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியை அழைத்து செல்வதற்காக, சூர்யா பொள்ளாச்சியில் இருந்து நேற்று முன்தினம் பைக்கில் ஆவடி வந்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை, சிறுமி சூர்யாவுடன் பைக்கில் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால். சிறுமியின் பாட்டி, ஆவடி போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், மொபைல் போன் சிக்னலை வைத்து, தாம்பரத்தில் இருந்த இருவரையும் மடக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.சிறுமியை உறவினருடன் அனுப்பி வைத்த போலீசார், சூர்யாவை 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.
24-Apr-2025