மாணவியை அழைத்து சென்ற ஆட்டோ ஓட்டுநர் மீது போக்சோ
தரமணி, தரமணி, தர்மாம்பாள் அரசினர் பாலிடெக்னிக் கல்லுாரியில், 17 வயதுள்ள இரண்டு மாணவியர், அங்குள்ள விடுதியில் இருந்து, இரு தினங்களுக்கு முன் வெளியேறினர்.ஒருவர் இரவும், மற்றொருவர் மறுநாளும் விடுதிக்கு திரும்பினர். விடுதி நிர்வாகத்தின் விசாரணையில், இன்ஸ்டாகிராமில் பழகிய ஆண் நண்பர்களுடன் வெளியே சென்றது தெரிந்தது. பின், பெற்றோரை அழைத்து சம்பவத்தை கூறி, மாணவியரை விடுதியில் இருந்து வெளியேற்றினர்.இந்நிலையில், தரமணி மகளிர் போலீசார், ஒரு மாணவியுடன் பழகிய ஆட்டோ ஓட்டுநரை, நேற்று கைது செய்துள்ளனர்.அவர் மீது, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மற்றொரு மாணவியுடன் சென்ற நபர் குறித்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.