மேலும் செய்திகள்
மேயர் பகிர்ந்த 'ரகசியம்'; 'அரசியல்' ஆன அதிசயம்
03-Dec-2024
புளியந்தோப்பு, புளியந்தோப்பைச் சேர்ந்த பெண்ணின் 16 வயது மகள், விஷால், 21 என்ற நபரை காதலித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28ம் தேதி, இரவு வீட்டில் இருந்து மாயமானார்.பின், காதலன் மொபைல் போனில் இருந்து பெற்றோரிடம் பேசிய அப்பெண், 'நான் விஷாலை திருமணம் செய்து கொண்டேன். யாரும் என்னைத் தேட வேண்டாம்' எனக் கூறி விட்டு, போனை 'சுவிட்ச் ஆப்' செய்துள்ளார். இது குறித்து, புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இந்நிலையில் 31ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரான அப்பெண், 28ம் தேதி சர்ச் ஒன்றில், விஷாலை திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். போலீசார், விஷால் மீது 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
03-Dec-2024