உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டாஸ்மாக் கடையில் பாயின்ட் ஆப் சேல் கருவி திருட்டு

டாஸ்மாக் கடையில் பாயின்ட் ஆப் சேல் கருவி திருட்டு

சென்னை, மந்தைவெளிபாக்கம், 13வது டிரஸ்ட் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் தனசேகர், 52. அவர் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் புலியூர் பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடை எண், 504ல் மேற்பார்வையாளராக பணிபுரிகிறார்.இந்நிலையில், கடையில் பயன்படுத்தி வந்த 'பாயின்ட் ஆப் சேல்' என்ற, வங்கி அட்டைகள் வாயிலாக பணம் பெறும் கருவி திருடுபோனது. இதையடுத்து, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் தனசேகர் புகார் அளித்தார். கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை