உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதைப்பொருள் விற்ற வண்ணை போலீஸ் கைது

போதைப்பொருள் விற்ற வண்ணை போலீஸ் கைது

சென்னை: எழும்பூர் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார், 16ம் தேதி அதிகாலை காந்தி இர்வின் சாலை சங்கீதா ஹோட்டல் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி, அதில் இருந்த பெண் உட்பட இருவரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், காரை சோதனை செய்தனர்.அதில், 700 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 6.5 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.பெரம்பூர், ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், 39, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா, 24, என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், போதைப் பொருட்கள் மட்டுமின்றி, கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் வினியோகித்த பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ்காரர் அருண்பாண்டியன், 30, என்பவரையும், எழும்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ