மழைக்கால பாதிப்பு இடம் தகவல் சேகரிக்கும் போலீஸ்
சென்னை: சென்னை போக்குவரத்து காவல் துறையில் சேர்ந்து பணிபுரிய ஆவலாக உள்ளோருக்காக, போக்குவரத்து பிரிவு 'வாட்ஸாப்' குழு ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவில் 1,000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். இவர்களை வைத்து, மழைக்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, போலீசார் கூறியதாவது: தன்னார்வலர்களை வைத்து, ஒவ்வொரு மண்டலம் வாரியாக, தகவல் சேகரித்து வருகிறோம். உதாரணமாக, ஓரிடத்தில் விபத்து ஏற்படும் வகையில் பள்ளம் இருந்தால் அது எந்த இடம், புகார்தாரர் யார் உள்ளிட்ட விபரங்களை சேகரித்து, மழைக்கால பாதிப்பு அங்கு ஏற்படாமல் தடுக்க வேண்டிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வாகன போக்குவரத்து சீராக இருக்க, தன்னார்வலர்களிடம் இருந்து பெறப்படும் கருத்துகள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.