உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் கோப்பை சதுரங்கம் போலீஸ், வனத்துறை முதலிடம்

முதல்வர் கோப்பை சதுரங்கம் போலீஸ், வனத்துறை முதலிடம்

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில், பெண்களில் போலீஸ், ஆண்களில் வனத்துறை ஊழியர்கள் முதலிடங்களை தட்டிச் சென்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், செங்கல்பட்டு மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலையில் நடந்து வருகிறது. இதில், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் நேற்று நடந்தன. போட்டியில், நகராட்சி, போலீஸ், வனத்துறை, தீயணைப்பு உள்ளிட்ட பல்துறைகளில் இருந்து, ஆண்களில் 20 பேரும், பெண்களில் 10 பேரும் பங்கேற்றனர். பெண்கள் பிரிவில் ஐந்து சுற்றுகள் முடிவில், போலீஸ் துறையின் வீரங்கனையரான தாம்பரத்தைச் சேர்ந்த அபிநயா, சந்தியா, பிரிந்தா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங் களை பிடித்தனர். ஆண்கள் பிரிவில் வனத்துறை வீரரான, வண்டலுாரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் முதலிடம் பிடித்தார். போலீஸ் துறை வீரர், குன்றத்துாரைச் சேர்ந்த பரமசிவன் இரண்டாமிடம், தீயணைப்பு துறை வீரர் தாம்பரம் மணிகண்டன் மூன்றாம் இடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி