உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலர் குறைதீர் முகாம் 62 பேர் கமிஷனரிடம் மனு

காவலர் குறைதீர் முகாம் 62 பேர் கமிஷனரிடம் மனு

சென்னை :சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று காவலர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது.பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மூன்று கூடுதல் துணை கமிஷனர்கள், ஒரு உதவி கமிஷனர், எட்டு ஆய்வாளர்கள் உட்பட, 62 பேரிடம் மனுக்களை பெற்று, கமிஷனர் அருண், குறைகளை கேட்டறிந்தார்.கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை, ஊதியம் குறைபாடு களைதல், காவலர் குடியிருப்பு கோருதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன.பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.இம்முகாமில், கூடுதல் கமிஷனர் விஜயேந்திர பிதாரி, துணை கமிஷனர் ஹரிகிரன் பிரசாத் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
மே 22, 2025 07:17

இலஞ்சம் வாங்காமல் எப்படி உண்மையாக வேலை செய்வது என்பதை தெரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர் இதில். Foreign countries மாதிரி கடற்கரையில் Dos & Donts boards வைக்கப்படுவது எப்போது. பாக்கறவங்களையெல்லாம் mobile ஐ பிடுங்கி photos எடுத்து பயமுறுத்தாமல் இருப்பது எப்போது


புதிய வீடியோ