உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆங்கில வழி கல்வி ஆசை  சிறுவனுக்கு போலீசார் உதவி

ஆங்கில வழி கல்வி ஆசை  சிறுவனுக்கு போலீசார் உதவி

ஆவடி: ஆவடியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு, அவரது ஆசைப்படியே தனியார் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் போலீசார் சேர்த்து விட்டது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி அடுத்த சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் வளர்மதி, 55. இவரது பேரன் ஹரீஷ், 14. கடந்தாண்டு வரை மஹாராஷ்டிராவில் பெற்றோருடன் வசித்து வந்த ஹரீஷ், அங்கு ஹிந்தி வழிக்கல்வி பயின்று வந்துள்ளார். பெற்றோர் பிரிந்த நிலையில், தற்போது பாட்டியுடன் தங்கி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். ஏற்கனவே, ஹிந்தி வழியில் கல்வி கற்ற ஹரிஷ், திடீரென தமிழ்வழியில் படிக்க சிரமப்பட்டார். இதனால், போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து, ஆங்கில வழியில் கல்வி கற்க உதவி செய்யுமாறு ஹரீஷ், கோரிக்கை விடுத்துள்ளார். அவரது ஆர்வத்தை பாராட்டிய கமிஷனர் சங்கர், சிறுவனின் ஆசைப்படியே, பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்திக்கு வழியாக ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று சேர்த்து விட்டார். சிறுவனுக்கு தேவையான புத்தகங்கள், சீருடை மற்றும் வீட்டிற்கு தேவையான காஸ் ஸ்டவ், சிலிண்டர் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்தார். பின், கமிஷனர் சங்கர் சிறுவனை அழைத்து, நன்றாக படிக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார். சிறுவனின் ஆர்வத்தையும், கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டரின் செயலையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ