லிப்ட்டில் பெண்ணிடம் சில்மிஷம் மர்ம நபருக்கு போலீசார் வலை
வானகரம், வானகரம் அடுத்த அடையாளம்பட்டு பகுதியில், கே.ஜி., சிக்னேச்சர் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது.இந்த அடுக்குமாடி குடியிருப்பில், 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், வீட்டு வேலை செய்து வருகிறார்.இவர், நேற்று வழக்கம் போல், பணிக்காக நான்காவது பிளாக் கட்டடத்தில் உள்ள லிப்ட்டில் சென்றார். அப்போது, லிப்டில் பயணித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண், கூச்சலிட்டு லிப்ட்டை நிறுத்தினார். பெண்ணின் சத்தம் கேட்டு ஓடிவந்த சக பெண் பணியாளர்கள், அந்த நபரை விரட்டிப் பிடிக்க முயன்றனர். அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார்.இதுகுறித்த புகாரையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, வானகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.