உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு குடியிருப்பை வாடகைக்கு விடும் போலீசார்  தில்லாலங்கடி! சென்னையில் மட்டும் 250 பேருக்கு மெமோ

அரசு குடியிருப்பை வாடகைக்கு விடும் போலீசார்  தில்லாலங்கடி! சென்னையில் மட்டும் 250 பேருக்கு மெமோ

சென்னை: அரசு காவலர் குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற்ற போலீசார், குத்தகைக்கும், மேல் வாடகைக்கும் விட்டு கல்லா கட்டி வருவது அம்பலமாகியுள்ளது. சென்னையில் நடந்த வேட்டையில் சிக்கிய, 250 போலீசாருக்கு விளக்கம் கேட்டு, 'மெமோ' அனுப்பப்பட்டு உள்ளது. மாநிலம் முழுதும் காவலர் குடியிருப்புகளில் ஆய்வு நடந்து வருகிறது. தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகம் வாயிலாக, ஆயுதப்படை காவலர்கள், எஸ்.ஐ.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டி.எஸ்.பி.,க்களுக்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. இதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, பதிவு மூப்பு அடிப்படையில் குறைந்த வாடகைக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன. அதிகாரிகள் சிபாரிசு கணவன், மனைவி இருவருமே காவல் துறை பணியில் இருந்தால், அவர்களுக்கு வீடு ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்திலும் வீடுகள் கட்டித் தரப்படுகின்றன. இதுவரை 'உங்கள் சொந்த இல்லம்' திட்டத்தில், 4,991 வீடுகள், 54,445 காவலர் வாடகை குடியிருப்புகள் கட்டப்பட்டு, போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காவலர் குடியிருப்புகளில், அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் சிபாரிசு வாயிலாக, சீனியாரிட்டி பட்டியலை, 'ஓவர் டேக்' செய்து, போலீசார் மற்றும் அதிகாரிகள் வீடு ஒதுக்கீடு பெற்று வருகின்றனர். 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்து வீடு கிடைக்காமல், பல ஆயிரம் போலீசார் காத்து கிடக்கும் நிலையில், காவலர் குடியிருப்புகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை, போலீசார் மற்றும் அதிகாரிகள் சிலர், வாடகைக்கும், குத்தகைக்கும் விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதற்கட்டமாக சென்னையில் நடந்த ஆய்வில், 250க்கும் மேற்பட்ட போலீசார் வீடுகளை வாடகைக்கு விட்டு, மாதம் தோறும் கல்லா கட்டி வருவது தெரிய வந்துள்ளது. மேலும், பலர் குத்தகைக்கு விட்டு, மொத்தமாக பல லட்சம் ரூபாய் வசூல் நடத்தி உள்ளனர். சென்னையில் போலீசாரின் அத்துமீறல் வெளிச்சத்துக்கு வந்துள்ளதால், மாநிலம் முழுதும் காவலர் குடியிருப்புகளில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் வசிக்கின்றனரா; வேறு யாருக்கும் வாடகைக்கு விட்டுள்ளனரா என ஆய்வு நடக்கிறது. இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: காவலர் குடியிருப்புகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள, 'லைன் ஆர்டலி' என்ற நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காவலர் குடியிருப்புகளில் நடக்கும் முறைகேடுகளை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது இல்லை. வீடு ஒதுக்கீடு பெற்ற போலீசார், மனைவி, குழந்தைகள் சொந்த ஊரில் இருந்தால், தங்களின் உறவினர்களுக்கு வீட்டை வழங்கிவிட்டு, அவர்கள் வெளியில் நண்பர்களுடன் தங்குகின்றனர். குத்தகைக்கு விட்டனர் சொந்த வீடு கட்டிய போலீசார், காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டை மற்ற போலீசாருக்கு மேல் வாடகைக்கு விடுகின்றனர். காவலர் குடியிருப்பு வீட்டை, 5 லட்சம் ரூபாய்க்கு குத்தகைக்கு விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இது குறித்த புகார் காரணமாக, தற்போது மாநிலம் முழுதும் ஆய்வு நடக்கிறது. சென்னையில் வீட்டை வாடகைக்கு விட்டுள்ள 250 பேருக்கு 'மெமோ தரப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ms Mahadevan Mahadevan
டிச 01, 2025 13:44

ஆத்திசூடி, கொன்றைவேந்தன் போன்ற நூல்கள் ஆரம்ப விலைகளில் நீக்கப் பட்ட காரணம் நேர்மை மற்றும் ஒழுக்கம் எங்கும் மறைந்து விட்டது


Krishna
நவ 28, 2025 19:06

Compulsorily Reduce Pay-Perks of All OverFattened& 90%Useless Govt Staff to 33% OR Best Approprita Minm Wages from President to GroupD


அப்பாவி
நவ 28, 2025 15:28

ஒருத்தன் கிட்டேயும் நேர்மை என்பது கிடையாது.


Anantharaman Srinivasan
நவ 28, 2025 13:38

காவலர் குடியிருப்பில் மட்டுமல்ல இந்த தில்லிலங்கடி மோசடி. அரசு ஊழியர் குடியிருப்பிலும் நடந்து கொண்டிருக்கிறது.


சமீபத்திய செய்தி