மூளையில் ரத்தக்கசிவு போலீஸ்காரர் பலி
பரங்கிமலை:: மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் உயிரிழந்தார்.தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ்பாபு, 28; தி.நகர் காவல் மண்டலத்தில், ரவுடி தடுப்பு நுண்ணறிவு பிரிவில், போலீஸ் காரராக பணிபுரிந்தார். பரங்கிமலை, மாங்காளியம்மன் கோவில் தெருவில் வீடு எடுத்து, ஐந்து போலீஸ்காரர்களுடன் தங்கியிருந்த சதீஷ்பாபுவுக்கு, இம்மாதம் 2ம் தேதி திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அறையில் தங்கியிருந்த நண்பர்கள், கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு, நடந்த பரிசோதனையில் பக்கவாத பாதிப்பால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இரவு இறந்தார்.