உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணனுார் ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

அண்ணனுார் ரயில்வே மேம்பாலத்தில் பள்ளம்

ஆவடி,ஆவடி அடுத்த அண்ணனுார் பகுதியில் 2020ம் ஆண்டு, 52 கோடி ரூபாய் மதிப்பீடில் மேம்பாலம் கட்டப்பட்டது. இருப்பினும், இதுவரை பொது போக்குவரத்து சேவையை அரசு துவங்கவில்லை. அதேநேரம் தனியார் போக்குவரத்து உள்ளது.இந்நிலையில், அண்ணனுாரில் இருந்து அயப்பாக்கம் செல்லும் மார்க்கத்தில், சாலையின் நடுவில் சிமென்ட் சாலை சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதில், வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலைமை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தின் சாலையை, விரைந்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !