இளம்பெண்ணிடம் சில்மிஷம் தனியார் வங்கி ஊழியர் கைது
நொளம்பூர், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், 2ம் ஆண்டு 'லேப் டெக்னீஷியன்' கோர்ஸ் படித்து வருகிறார். இவர், கடந்த 25ம் தேதி கல்லுாரி முடிந்து, நொளம்பூர், வேணுகோபால் தெருவில் நடந்து சென்றார். அப்போது, பைக்கில் பின்தொடர்ந்த மர்ம நபர், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பினார். இது குறித்த புகாரின் படி, நொளம்பூர் போலீசார் விசாரித்தனர்.விசாரணையில், பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, நீலாங்கரையைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சரத்பாபு, 31, என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர், மொபைல் போனில் பேசியபடி சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு, பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.