பெண்ணிடம் சில்மிஷம் தனியார் ஊழியர் கைது
சென்னை: திருவல்லிக்கேணியைச் சேர்ந்த, 36 வயது பெண், கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு வேலைக்கு செல்வதற்காக சிம்சன் சுரங்க நடைபாதையில் நடந்து சென்றார். அப்போது மதுபோதையில் வந்த வாலிபர், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு வந்த பொதுமக்கள், சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை நையபுடைத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த பெண்ணை மீட்டு, ஓமந்துாரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு கண் புருவம் அருகே 6 தையல்கள் போடப்பட்டன. போலீசாரின் விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மதன், 22 என்பதும், ஸ்ரீபெரும்பத்துாரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.