உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் சறுக்கி தனியார் ஊழியர் பலி

பைக் சறுக்கி தனியார் ஊழியர் பலி

குன்றத்துார், குன்றத்துார், சேக்கிழார் நகரைச் சேர்ந்தவர் கோபிநாத், 48; தனியார் ஊழியர். இவர், வண்டலுார் -- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே 'ஹோண்டா ஷைன்' இருசக்கர வாகனத்தில் நேற்று சென்று கொண்டிருந்தார்.அப்போது, வாகனம் சறுக்கி, நிலை தடுமாறி விழுந்ததில் தலையில் பலத்த காயமைடந்த கோபிநாத், சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கோபிநாத் உடலை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !