உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனியார் மருத்துவமனை முற்றுகை

தனியார் மருத்துவமனை முற்றுகை

கீழ்ப்பாக்கம், சிகி ச்சை பலனின்றி உயிரிழந்தவரின் குடும்பத்தினர், முன் சிகிச்சை பெற்ற கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையை நேற்று முற்றுகையிட்டதால் சலசலப்பை ஏற்படுத்தியது. சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கவியரசன், 28. திருமணமாகாத இவருக்கு, நுரையிரலில் பிரச்னை இருந்தால் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம், வங்கி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 15 நாட்களுக்க முன், மேல் சிகி ச்சைக்காக ராயப்பேட்டையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இரு தினங்களுக்கு கவியரசன் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த கவியரசனின் உறவினர்கள், முன் சிகிச்சை பெற்ற கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, நேற்று மாலை முற்றுகையிட முயன்று, டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். சம்பவம் அறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். இச்சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை