மேலும் செய்திகள்
சாலை விபத்தில் மூதாட்டி பலி
17-Jun-2025
துரைப்பாக்கம்: டிப்பர் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக், 45. இவர், துரைப்பாக்கம், லட்சுமி நகர் இரண்டாவது தெருவில் குடும்பத்துடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். நேற்று, 'ஹீரோ ஸ்பிளன்டர்' இருசக்கர வாகனத்தில், ஓ.எம்.ஆர்., நோக்கி சென்று கொண்டிருந்தார்.துரைப்பாக்கம் சிக்னலில் திரும்பும்போது, வேகமாக வந்த டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஜாபர் சாதிக், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், லாரி ஓட்டுநரான உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஓம்கார், 30, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
17-Jun-2025