உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.6.60 கோடியில் திட்ட பணிகள்

ரூ.6.60 கோடியில் திட்ட பணிகள்

துறைமுகம், அக். 1-ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட துறைமுகம் தொகுதியில், கவுன்சிலர் மேம்பாட்டு நிதியின் கீழ், வார்டு 56ல், பிராட்வே, இப்ராஹிம் சாலை, பிரகாசம் சாலை, டான்பாஸ்கோ பள்ளி அருகே, 40 லட்சம் ரூபாய் செலவில் மூன்று நவீன பேருந்து நிறுத்தங்கள் உள்ளிட்ட ஒன்பது திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மேலும், பிராட்வே, பேரக்ஸ் சாலை, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, பிராட்வே, ராஜாஜி சாலை ஆகிய இடங்களில், 2.18 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3 புதிய மழைநீர் வடிகால் பணிகள், மின்ட் பகுதியில், 1.20 கோடி ரூபாய் செலவில், சிமென்ட் கான்கிரீட் சாலை பணிகள் என, மொத்தம் 6.60 கோடி ரூபாய் செலவிலான புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா, வடக்கு வட்டார துணை கமிஷனர் கட்டா ரவி தேஜா, ராயபுரம் மண்டல குழு தலைவர் ஸ்ரீராமலு, கவுன்சிலர்கள் ராஜேஷ் ஜெயின், நவீன், பரிமளம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை