மேலும் செய்திகள்
பொம்மராஜபுரம் பள்ளியில் வகுப்பறை கட்ட பூமி பூஜை
26-Nov-2024
ஆவட ஆவடி மாநகராட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநில நிதி மானியம் வாயிலாக பல்வேறு திட்டப்பணிகள் நேற்று துவக்கப்பட்டன. அதன்படி, 15 லட்சம் மதிப்பில், காமராஜ் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிமென்ட் கல்லால் தரைதளம் அமைக்கும் பணி. திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் மேல்நிலைப் பள்ளியில் 32 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம். திருமுல்லைவாயில், எட்டியம்மன் நகர் மேல்நிலைப் பள்ளியில், 64 லட்சம் மதிப்பில் நான்கு கூடுதல் வகுப்பறை கட்டடம்.திருமுல்லைவாயில், காலனி பகுதியில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில், 47 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம். 38.50 லட்சம் மதிப்பில் முல்லை நகர், சோழன் நகர் மற்றும் சோழம்பேடு பகுதியில் சிந்தாமணி நியாய விலை கடை கட்டடம் உட்பட 3.57 கோடி மதிப்பில் 15 திட்டப்பணிகளை, அமைச்சர் நாசர் நேற்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் ஆவடி மேயர் உதயகுமார், மாநகராட்சி கமிஷனர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
26-Nov-2024