உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமியாரை வெட்டிய மருமகனுக்கு காப்பு

மாமியாரை வெட்டிய மருமகனுக்கு காப்பு

புளியந்தோப்பு: மாமியாரை வெட்டிய மருமகனை, போலீசார் கைது செய்தனர். புளியந்தோப்பு, கே.பி., பார்க் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உஷா, 40. இவருக்கு இரண்டு மகன்; ஒரு மகள் உள்ளனர். மகள் ரோஜாவுக்கு வெற்றிவேல் என்பவருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப தகராறால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தாய் வீட்டில் வசித்து வரும் ரோஜாவிடம், நேற்று முன்தினம் இரவு, மது போதையில் சண்டையிட்டு வாக்குவாதம் செய்த வெற்றிவேல், ரோஜாவை கத்தியால் வெட்ட முற்பட்டார். அதை தடுக்க சென்ற உஷாவின் இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. இதையடுத்து, உஷா மற்றும் ரோஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதன்பின், இருவரும் அளித்த புகாரின்படி, பேசின்பாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புளியந்தோப்பை சேர்ந்த வெற்றிவேலை, 26, நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ