மேலும் செய்திகள்
உள்வாங்கும் நடைபாதை பாதசாரிகள் சிக்கி பாதிப்பு
03-Sep-2025
குரோம்பேட்டை: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ராஜேந்திர பிரசாத் சாலையோரம் உள்ள நடைபாதை சேதமடைந்து, கற்கள் பெயர்ந்து உள்ளன. இதனால், பாதசாரிகள் தடுக்கி விழுந்து காயமடைகின்றனர். இந்த நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தி, தாம்பரம் மாநகராட்சியில் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வி.சந்தானம் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர், நடைபாதையை சீரமைக்க வலியுறுத்தி, விளம்பர பாதாகைகளுடன், தலையில் காயம் ஏற்பட்டதைபோல் துணியால் கட்டு போட்டு, நுாதன முறையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
03-Sep-2025