மேலும் செய்திகள்
பாதியில் விடப்பட்ட சிமென்ட் கல் சாலை பணி
25-Sep-2025
அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு
11-Oct-2025
சென்னை: சென்னை, திருவொற்றியூர், எல்லையம்மன் கோவில் தெருவில், கேசவன் பூங்கா பயன்பாட்டில் இருந்தது. 2001ம் ஆண்டிற்கு பின், பூங்கா படிப்படியாக ஆக்கிரமிப்பில் சிக்கியது. தற்போது, பூங்கா இருந்த அடையாளம் தெரியாமல் போய்விட்டது. இந்நிலையில், காணாமல் போன பூங்காவை கண்டுபிடித்து தரக்கோரி, தொண்டர் இயக்க மாநில தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று, தேரடியில் இருந்து பேரணியாக எல்லையம்மன் கோவில் தெருவிற்கு வந்தனர். பூங்கா இருந்த இடத்தில் டார்ச் லைட் அடித்து, பூங்காவை தேடும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டு, அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போலீசார் கூறியதை அடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.
25-Sep-2025
11-Oct-2025