உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் சேவை மாற்றம்

பொது தாம்பரம் - விழுப்புரம் ரயில்கள் சேவை மாற்றம்

சென்னை, ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, தாம்பரம் - விழுப்புரம் ரயில்களின் சேவையில், ஐந்து நாட்களுக்கு ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் ரயில்வே யார்டில் வரும் 9, 18, 23, 25, 30ம் தேதிகளில் ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒரு பகுதி ரத்து; ★ தாம்பரம் - விழுப்புரம் காலை 9:45 மணி ரயில், மேற்கண்ட நாட்களில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் ★ விழுப்புரம் - கடற்கரை மதியம் 1:40 மணி ரயில், மேற்கண்ட நாட்களில் முண்டியம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ