உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணிடம் ரூ.17.40 லட்சம் ஆட்டை புழல் சிறை கைதிக்கும் தொடர்பு

பெண்ணிடம் ரூ.17.40 லட்சம் ஆட்டை புழல் சிறை கைதிக்கும் தொடர்பு

அண்ணா நகர், டில்லி போலீஸ் பேசுவது போல் மிரட்டி, பெண்ணிடம் 17.40 லட்சம்ரூபாயை 'ஆட்டை' போட்டவழக்கில், ஏற்கனவே சைபர் கிரைம் வழக்கில்கைதாகி சிறையில் இருக்கும் 'பலே' திருடனுக்கும் இதில் தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமானது.கொளத்துாரைச் சேர்ந்தவர் ரமா, 53. இவருக்கு, சில மாதங்களுக்கு முன், ஒரு மொபைல் போன் எண்ணில் இருந்து பேசிய நபர், ரமா பெயரில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கி கிரெடிட் கார்டில், 1.09 லட்சம் ரூபாய் நிலுவை தொகை இருப்பதாக தெரிவித்தார்.தன்னிடம் கார்டு இல்லை என ரமா கூறியதும், இணைப்பை டில்லி போலீசுக்கு மாற்றுவதாக கூறியுள்ளார். பின், இந்தாண்டு ஏப்., 14 - 17ம் தேதி வரை, டில்லி போலீஸ் பேசுவது போல் ஒருவர், கைது செய்ய போவதாக ரமாவையும், அவரது மருமகளையும் மிரட்டி வந்துள்ளனர்.பல வங்கி கணக்கு வாயிலாக, 17.40 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரமா, அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார், ரமா பணம் அனுப்பிய வங்கி கணக்குகளை ஆராய்ந்தபோது, குற்ற வழக்கு ஒன்றில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் துாத்துக்குடி, சிதம்பர நகரைச் சேர்ந்த ஆனந்தகுமார், 43, இந்த குற்றத்திலும் ஈடுபட்டது தெரிந்தது.வங்கி காசோலை ஆள்மாறாட்ட வழக்கில் ஜூன் 7ம் தேதி அண்ணா நகர் சைபர் போலீசாராலே ஆனந்தகுமார் கைதாகி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ரமா வழக்கிலும் தொடர்புடைய ஆனந்தகுமாரை, இரண்டு நாட்கள் காவலில் எடுத்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:ஆனந்தகுமார், அவரது பெயரிலும், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பெயரிலும், பல வங்கி கணக்குகள் துவங்கி, அவர்களுக்கு கமிஷன் கொடுத்துள்ளார். அவர்களின் வங்கி விபரங்களை, சைபர் குற்றவாளிகளிடம் கொடுத்தும், அவர்களிடம் இருந்தும் கமிஷன் தொகை பெற்று வந்துள்ளார்.அதுபோல், சிறைக்கு செல்லும் முன், ரமாவிடம் மூன்று லட்சம் ரூபாயை நேரடியாக பெற்றுள்ளார். கடந்த ஏப்., 16ம் தேதி, அவரது வங்கி கணக்கில் இருந்து 22 லட்சம் ரூபாயை எடுத்து, சைபர் கிரைம் எதிரிகளிடம் கொடுத்து, கமிஷன் தொகையை பெற்றுள்ளார். ரமா வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி