உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராணிமேரி கல்லுாரி அணி மாநில வாலிபாலில் சாம்பியன்

ராணிமேரி கல்லுாரி அணி மாநில வாலிபாலில் சாம்பியன்

சென்னை: சென்னையில் நடந்த மாநில வாலிபால் போட்டியில், ராணிமேரி கல்லுாரி அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி., சார்பில் 2025ம் ஆண்டிற்கான விளையாட்டு திருவிழா, ஐ.ஐ.டி., வளாகத்தில் நடக்கிறது. இதில் 10க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள், வாலிபால், கூடைப்பந்து உட்பட 12 வகையான போட்டிகளில் பங்கேற்று, விளையாடி வருகின்றன. இதில், மகளிர் வாலிபால் போட்டியில் ராணிமேரி, வி.ஐ.டி., உட்பட ஆறு அணிகள் போட்டியிட்டன. போட்டிகள் லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு அணியும் குழுவில் உள்ள மற்ற ஐந்து அணிகளுடன் விளையாட வேண்டும். ராணிமேரி கல்லுாரி அணி தன் முதல் போட்டியில், ஐ.ஐ.டி, அணியை எதிர்கொண்டது. இதில் அசத்திய ராணிமேரி அணி 25 - 11, 25 - 18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் ராணிமேரி அணி, வி.ஐ.டி., அணியை 25 - 13, 25 - 12 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. லீக் முடிவில் ராணிமேரி கல்லுாரி அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. மேலும், ஒரு தோல்வியுடன் அன்னை வேளாங்கண்ணி அணி இரண்டாவது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி., மூன்றாவது இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை