சிறுவனிடம் சில்மிஷம் சிறுவர்களிடம் விசாரணை
நொளம்பூர்:அண்ணா நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்பது வயது சிறுவன், நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த, 17 வயது சிறுவர்கள் இருவர், சிறுவனை கிண்டல் செய்துள்ளனர். ஆத்திரமடைந்த ஒன்பது சிறுவன், இருவரிடமும் வாக்குவாதம் செய்துள்ளார்.பின், 17 வயது சிறுவர்கள் இருவரும் இணைந்து, ஒன்பது வயது சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தன் தந்தையிடம் ஒன்பது வயது சிறுவன் கூற, அப்பகுதிவாசிகள் சில்மிஷத்தில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்களையும் தேடி பிடித்துள்ளனர்.தகவலறிந்து சென்ற நொளம்பூர் போலீசார், இரண்டு சிறுவர்களையும் மீட்டு, திருமங்கலம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.