உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோவில் மண்டபம் கட்ட எதிர்ப்பு பணியை தொடர ரயில்வே தடை

கோவில் மண்டபம் கட்ட எதிர்ப்பு பணியை தொடர ரயில்வே தடை

பெருங்குடி: பெருங்குடி மண்டலம், கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகரில், 1994ம் ஆண்டு முதல், ஸ்ரீசித்தி புத்தி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இதை ஒட்டியுள்ள இடத்தில், கோவிலுக்கான மண்டபம் கட்டும் பணி, சில தினங்களுக்கு முன் துவக்கப்பட்டது. கோவில் மண்டபம் அமையும் இடம், ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமானது எனவும், அங்கு எவ்வித பணியும் செய்யக் கூடாது எனவும், சிலர் அளித்த புகாரின்படி, ரயில்வே துறை அதிகாரிகள் கட்டுமான பணியை நிறுத்தினர். இதுகுறித்து, கோவில் நிர்வாகி ரவி கூறியதாவது: இந்த கோவில், 1994ல் கட்டப்பட்டது. அதன்பின், 2000ம் ஆண்டில், வேளச்சேரி - கடற்கரை மேம்பால ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்திய போது, மக்களின் வேண்டுகோளின்படி, ரயில்வே துறை இந்த இடத்தை கோவிலுக்கென ஒதுக்கியது. அந்த இடத்தில், தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, கடைகள் கட்டி வாடகை விட்டுள்ளார். இந்நிலையில், ஆக்கிரமிப்பு போக மீதமுள்ள இடத்தில் தான், மண்டபம் கட்ட துவங்கிஉள்ளோம். கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில், சிலர் பொய்யான புகாரை, ரயில்வே துறைக்கு அளித்துள்ளனர். மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையொப்பமிட்டு, ரயில்வே அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளோம். மண்டபம் கட்ட அனுமதிக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை