மேலும் செய்திகள்
தென்னை மஞ்சி தொழிற்சாலையில் தீ
21-Jul-2025
பெருங்குடி:பெருங்குடி குப்பை கிடங்கில், நேற்று திடீரென தீ பற்றியது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடிய நிலையில், அவர்களுக்கு மழையும் உதவியதால், தீ அணைக்கப்பட்டது. பெருங்குடியில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் உரக்கூடத்தில், நேற்று மாலை 3:00 மணி அளவில் தீ பற்றியதால், அப்பகுதி முழுதும் தீ பரவியது. காற்று பலமாக வீசியதால், தீயில் இருந்து புகை அதிகமாக வெளியேறியது. இதனால், துரைப்பாக்கம்- - பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்ற வாகன ஒட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. தகவல் அறிந்த துரைப்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். குப்பை மத்தியில் நெருப்பு துகள்கள் அதிகளவில் இருந்ததால், புகை வந்து கொண்டே இருதது. இதனால், நெருப்பை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரமாக போராடினர். இந்நிலையில், மாலை 6:00 மணிக்கு பெய்த மழை, தீயை முழுமையாக கட்டுபடுத்தப்படுத்த உதவியது.
21-Jul-2025